You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'மீண்டும் திமுக ஆட்சி' - ஸ்டாலினை சந்தித்த பின் ஓ.பன்னீர்செல்வம் கூறியது என்ன?
அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப்ரவரி 20) தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர், முதலமைச்சரை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பான ஆட்சிக்கு, முதலமைச்சரை சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்." எனக் கூறினார்.
“இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலை, ஆட்சியின் நிலை, 5 ஆண்டுகள் திமுக செய்த சாதனைகள் மக்கள் மனதில் பதிந்திருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு