You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: நீரின் மேற்பரப்பில் 515 அடி தூரம் கல் எறிந்து ‘மிரள வைத்த’ நபர்
ஏரி, குளங்களில், தண்ணீருக்குள் கல் எறிவதைப் பார்த்திருப்போம். அந்தக் கல் தண்ணீரின் மீது லேசாக பட்டுப் பட்டு சில முறை மேலெழும்பி பின்னர் உள்ளே மூழ்கும் வகையில் எறியும் ஸ்கிம்மிங் விளையாட்டில், ஒருவர் 157 மீட்டர், அதாவது 515 அடி தொலைவு வரை கல் எறிந்து சாதித்துள்ளார்.
பிரிட்டனின் பெம்ப்ரோஷையரை சேர்ந்த பிலிப் ப்ளாக்ஸ்ஹாம், அர்ஜென்டினாவில் நடைபெறும் முதல் சாம்பியன்ஷிப் போட்டியில் நடுவராகப் பங்கேற்கச் செல்கிறார்.
அவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை கற்களை ஸ்கிம் செய்வதில் செலவிட்டார். ஆனால், 2022ஆம் ஆண்டு டெவோனில் விடுமுறையில் இருந்தபோது அவர் ஒரு சாம்பியனை போல ஸ்கிம் செய்வதாகக் கூறப்பட்டது.
இது அவரை இந்த விளையாட்டு குறித்து ஆய்வு செய்யத் தூண்டியது. மேலும், வெல்ஷ் சாம்பியன்ஷிப்கள் நடப்பதைக் கண்டு அவர் அதில் பங்கெடுக்க முடிவு செய்து, அதில் இரண்டாவது இடத்தையும் பிடித்தார்.
அவரது திறமை பற்றிய செய்தி இப்போது தென் அமெரிக்காவுக்கும் பரவியுள்ளது. அங்கு படகோனியாவில் நடக்கவுள்ள சாம்பியன்ஷிப் போட்டிக்கு நடுவராகச் செயல்பட அழைக்கப்பட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு