இத்தாலி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு

பட மூலாதாரம், Christian Petersen

படக்குறிப்பு, ஸ்டெல்வியோ ஆல்பைன் ஸ்கீயிங் மையத்தில் ஆண்களுக்கான ஒருங்கிணைந்த ஸ்லாலோம் போட்டியில் பங்கேற்ற அமெரிக்காவின் ரிவர் ராடமஸ். (பிப்ரவரி 9)
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இத்தாலியின் மிலன், கார்டினா நகரங்களில், 25வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 6-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள், 22ஆம் தேதி நிறைவு பெறுகின்றன.

இந்த 25வது குளிர்கால ஒலிம்பிக்கில் 90 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள், 116 பதக்கங்களுக்காக போட்டியிடுகிறார்கள்.

இதில் இந்திய அணியும் கலந்துகொள்கிறது. இந்தியா சார்பில் ஆரிஃப் முகமது கான், ஸ்டான்சின் லுண்டப் ஆகிய இருவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924-ஆம் ஆண்டு பிரான்சில் தொடங்கியதிலிருந்து, இதில் அதிக வெற்றிகளைப் பெற்ற நாடு நார்வே ஆகும்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்ற நாடு என்ற சாதனையை வைத்துள்ள நார்வே மொத்தம் 405 பதக்கங்களுடன் பதிவு செய்துள்ளது. இதில் அதிக தங்கப் பதக்கங்களும் (148) அடங்கும்.

இந்த முறையும், 8 தங்கப் பதக்கங்கள் உள்பட 18 பதக்கங்களுடன் நார்வே முன்னிலையில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிப்ரவரி 6, இத்தாலியில் நடைபெற்ற 2026 குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில், ஆரிஃப் முகமது கான் இந்தியாவின் கொடியை ஏந்திச் சென்றார்.

பட மூலாதாரம், Elsa

படக்குறிப்பு, தொடக்க விழாவில் அமெரிக்க இசைக் கலைஞர் மரியா கேரி

பட மூலாதாரம், Matthias Hangst

படக்குறிப்பு, இத்தாலியின் சான் சிரோவில் நடைபெற்ற தொடக்க விழாவின் போது ஒலிம்பிக் வளையங்களிலிருந்து வெடித்த பட்டாசுகள்.

பட மூலாதாரம், David Ramos

படக்குறிப்பு, லிவிக்னோ ஏர் பார்க்கில் ஃப்ரீஸ்டைல் ​​ஸ்கையிங் மொகல்ஸ் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் ஜகாரா அந்தோணி. (பிப்ரவரி 7)

பட மூலாதாரம், Getty Images

பட மூலாதாரம், Jared C. Tilton

படக்குறிப்பு, மிலானோ சாண்டா கியுலியா ஐஸ் ஹாக்கி அரங்கில், கனடாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு ஆலோசனையில் அமெரிக்காவின் ஐஸ் ஹாக்கி அணி. (பிப்ரவரி 10)

பட மூலாதாரம், Hector Vivas

படக்குறிப்பு, லிவிக்னோ ஏர் பார்க்கில் நடைபெறும் ஆண்களுக்கான ஃப்ரீஸ்கை ஸ்லோப்ஸ்டைல் ​​இறுதிப் போட்டியில் பங்கேற்ற நார்வேயின் பிர்க் ரூட் (பிப்ரவரி 10)

பட மூலாதாரம், Alex Slitz

படக்குறிப்பு, பிரிடாஸ்ஸோ ஸ்கை ஜம்பிங் ஸ்டேடியத்தில் கலப்பு அணி சோதனைச் சுற்றில் போட்டியிட்ட சீனாவின் கிவு சாங் (பிப்ரவரி 10)

பட மூலாதாரம், Michael Reaves

படக்குறிப்பு, லிவிக்னோ ஸ்னோ பார்க்கில் அமெரிக்காவின் குளோய் கிம்மிற்கு ஆதரவாக ஜாக்கெட் அணிந்து, ராப்பர் மற்றும் அமெரிக்க அணியின் கௌரவ பயிற்சியாளர் ஸ்னூப் டாக், பெண்கள் ஸ்னோபோர்டு ஹாஃப்-பைப் இறுதிப் போட்டியைப் பார்க்கிறார். (பிப்ரவரி 12)

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தன்னுடைய பிரத்யேக தலைக்கவசத்தை அணிய அனுமதிக்கப்பட்டால் மட்டுமே போட்டியிடுவேன் என்று கூறியதை அடுத்து, விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு சக விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் தலைக்கவசம் அணிந்திருந்ததால், யுக்ரேனைச் சேர்ந்த விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Richard Heathcote

படக்குறிப்பு, தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, பயிற்சியில் யுக்ரேனின் விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் (பிப்ரவரி 11)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு