You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ISWOTY கருப்பொருளை விளக்கிய ஜோனதன் முன்ரோ
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிபிசி செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்கள் தலைமை செயல் அதிகாரி ஜோனதன் முன்ரோ, "விளையாட்டின் மீதான பெண்களின் ஆர்வமும், பங்கேற்பும் அதிகரித்துள்ளது. இந்த மதிப்புமிக்க விருதுகள் அந்த வெற்றியை பிரதிபலிக்கின்றன, இந்தியாவில் விளையாட்டின் வளமான பன்முகத்தன்மையை அதிகரித்துள்ளன. மேலும் மக்களின் தனித்துவமான செயல்திறன்கள் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்றன."
"கடந்தாண்டு இந்திய மகளிர் விளையாட்டு வீராங்கனைகளுக்கு மிகவும் சிறப்பானது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சொந்த மண்ணில், மிகப்பெரிய கூட்டத்திற்கு மத்தியில் உலகக் கோப்பையை வென்றதன் மூலம் வரலாறு படைத்தது. பார்வையற்றோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அணியும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களுக்கு வாழ்த்துகள்."
"இந்திய தடகள வீராங்கனைகளிடம் இருந்தும் சக்தி வாய்ந்த ஆட்டத்தை கண்டோம். அதுதான் இந்த ஆண்டு விருதுகளுக்கான கருப்பொருளை தேர்வு செய்யத்தூண்டியது. சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால். "Every Body can play" விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க உடல், சமூக அல்லது கலாசார தடைகளை தாண்டிய பெண்களை மையமாகக் கொண்டது." எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு