You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வெள்ளத்தின்போது மின்கம்பத்தை பிடித்து உயிர் தப்பிய பெண்
பிரேசிலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், மின்கம்பத்தை பிடித்தபடி பெண் ஒருவர் தப்பியுள்ளார்.
பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
ஆறுகளின் கரைகள் உடைந்ததால், மினாஸ் ஜெராய்ஸ் மாகாணத்தில் உள்ள முழு சுற்றுப்புறமும் வெள்ளத்தில் மூழ்கின.
மின்கம்பத்தைப் பிடித்திருந்த பெண் உயிர் பிழைத்தார். ஆனால் பலரும் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர வேண்டியிருந்தது.
மீட்புக் குழுவினர் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர். ஆனால், தொடரும் மழையால் தேடுதல் பணிகள் மேலும் சிக்கலாகிவிடும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு