காணொளி: 'எங்களுக்கு வேறு வேலை இல்லையே' - பட்டாசு ஆலை விபத்தில் பலியானவரின் தாய் பேட்டி

காணொளிக் குறிப்பு, விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - உயிரிழந்தவரின் தாய் பேட்டி
காணொளி: 'எங்களுக்கு வேறு வேலை இல்லையே' - பட்டாசு ஆலை விபத்தில் பலியானவரின் தாய் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், விருதுநகர் அருகே நேரிட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் வாச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டனார்பட்டி பகுதியில் முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்த ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. முன்புற வராண்டாவில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தால் மூன்றுக்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்தன. மேலும் சில கட்டடங்கள் முற்றிலும் தரைமட்டமாகின.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு