You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தடுப்பை மீறி எதிரே வந்த கார் மீது மோதிய ஃபெராரி கார்
காணொளி: தடுப்பை மீறி எதிரே வந்த கார் மீது மோதிய ஃபெராரி கார்
ஹைதராபாத்தில் ஃபெராரி (Ferrari) கார் ஒன்று சாலை தடுப்பை மீறி எதிர் திசையில் வந்து கொண்டிருந்த கார் மீது மோதியது.
கடந்த 22-ம் தேதி ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் நடந்த இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து பேசிய காவல்துறையினர், இரண்டு கார்களில் வந்தவர்களும் சீட் பெல்ட் அணிந்திருந்ததாலும் ஏர் பேக் செயல்பட்டதாலும் உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவித்தனர். மேலும், எதிர்திசையில் வந்த காருக்கு பின்பு வந்த மற்றோரு காரும் இதில் சேதமடைந்தது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு