You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 50 ஆண்டுகள் பழைய விமானம் கீழே விழுந்து விபத்து
கர்நாடகாவில் எரிபொருள் இல்லாமல் தரையில் மோதி தரையிறங்கிய சிறிய ரக விமானம் மூன்று துண்டுகளாக உடைந்தது.
தனியார் நிறுவனத்தை சேர்ந்த Cessna 172 Model விமானமான இது 50 ஆண்டுகள் பழையது என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 8ம் தேதி கர்நாடகாவின் கலபுராகில் இருந்து பெலகாவி நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில் விஜயபுரா அருகே திறந்த வெளியில் இந்த விமானம் தரையில் மோதி தரையிறங்கியது.
விமானத்தில் இருந்த பயிற்சியாளர் மற்றும் பயிற்சி விமானி ஆகிய இருவரும் பாதுகாப்பாக உள்ளதாக கூறியுள்ள விமான போக்குவரத்து அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு