You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்தோனீசியாவில் 7.4 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனீசியாவில் 7.4 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
டெர்னேட் நகரத்தில், ஏப்ரல் 2 ஆம் தேதி அன்று உள்ளூர் நேரப்படி காலை 6:48 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் குறைந்தது ஒருவர் உயரிழந்துள்ளார் மற்றும் பல பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் தாங்கள் உணர்ந்ததிலேயே இது மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று என அப்பகுதி மக்கள் சிலர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
மேலும் இந்தோனீசியா, பிலிப்பின்ஸ், மலேசியாவின் கடலோரப் பகுதிகளைச் சுனாமி அலைகள் வந்தடைய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் இரண்டு மணி நேரத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு