You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வானம் எப்போதும் நீல நிறத்தில்தான் இருக்குமா?
வானம் எப்போதும் நீல நிறமாகவே இருந்ததில்லை, இனியும் இதே நீல நிறத்திலேயே இருக்கப் போவதும் இல்லை.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மீத்தேன் வானத்திற்கு லேசான ஆரஞ்சு நிறத்தை அளித்தது.
பின்னர், வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகமாகி, அந்த மீத்தேனை அகற்றியது. இதன்பின் தான் நாம் இப்போது பார்க்கும் நீல நிறமாக வானம் மாறியது.
"வழக்கமான சூரிய வெளிச்சம் வெண்ணிறமாக இருக்கும், அதில் வானவில்லின் அனைத்து வண்ணங்களும் இருக்கும். வானத்தில் குறிப்பிட்ட துகள்கள் உள்ளன, அவை நீல நீல ஒளியைச் சிதறடிக்கின்றன." என்கிறார்
அப்படியெனில், வானம் மீண்டும் தன் நிறத்தை மாற்றக்கூடுமா?
மிகப்பெரிய மாற்றங்கள் சுமார் 100 கோடி ஆண்டுகளில் ஏற்படும், அப்போது சூரியன் இன்று இருப்பதை விட 10% அதிக வெப்பமாக இருக்கும்.
எனவே, வானம் எப்போதும் நீல நிறமாக இருக்காது, ஆனால் அதில் மாற்றத்தைக் காண குறைந்தது 100 கோடி ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு