You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'கியூபாவில் மோசமான சூழல் நிலவுகிறது' - டிரம்ப்
கியூபாவின் நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "அது ஒரு மனிதாபிமான நெருக்கடியாக இருக்க வேண்டியதில்லை. அவர்கள் அநேகமாக எங்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்ய விரும்புவார்கள் என்று நினைக்கிறேன். அதனால், கியூபா மீண்டும் சுதந்திரம் பெறும். அவர்கள் எங்களிடம் வருவார்கள், ஓர் ஒப்பந்தம் செய்வார்கள்."
"ஆனால் கியூபாவிற்கு உண்மையில் ஒரு பிரச்னை இருக்கிறது. உங்களுக்குத் தெரியும், அவர்களுக்கு ஒரு பிரச்னை இருக்கிறது. கியூபாவைச் சேர்ந்த பலரை எனக்குத் தெரியும், தற்போது அமெரிக்காவில் இருக்கும் கியூபாவைச் சேர்ந்த பலரும் தாயகம் திரும்ப விரும்புவார்கள், ஆகவே நாங்கள் அதை சரிசெய்ய விரும்புகிறோம்."
கியூபாவிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? அதாவது, அது நடக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்விக்குப் பதிலளித்த அவர், "நாங்கள் ஓர் ஒப்பந்தம் செய்வோம். நாங்கள் கியூபாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்யப் போகிறோம் என்று நினைக்கிறேன். நாங்கள் கருணையுடன் இருப்போம். கியூபாவில் மோசமான சூழல் நிலவுகிறது. அவர்களிடம் பணம் இல்லை. அவர்களிடம் எண்ணெய் இல்லை. அவர்கள் வெனிசுவேலாவின் பணம் மற்றும் எண்ணெயைச் சார்ந்துள்ளனர், இனி அது எதுவும் கிடைக்காது." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு