You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரானில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
இரானில் பல பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடந்த அடக்குமுறைக்கு பிறகு, இத்தகைய பெரிய அளவிலான போராட்டம் நடந்துள்ளது.
இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷரீப் பல்கலைக் கழக வளாகத்தில், மாணவர்கள் பேரணியாக சென்ற காட்சிகளின் உண்மைத்தன்மையை பிபிசி உறுதி செய்துள்ளது. போராட்டக்காரர்கள் மற்றும் அரசை ஆதரிப்பவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
டெஹ்ரானில் உள்ள மற்றொரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். வடகிழக்கு பகுதியில் ஒரு பேரணி நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் நடந்த பெரும் போராட்டங்களில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களை நினைவுகூர மாணவர்கள் இந்த போராட்டங்களை நடத்தினர்.
இரான் அருகே தனது ராணுவ இருப்பை அமெரிக்கா அதிகரித்து வருகிறது. இரான் மீது கட்டுப்படுத்தப்பட்ட அளவில், குறைந்த அளவிலான ராணுவ தாக்குதல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு