You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: விசாரணையில் பதில் சொல்ல மறுத்த எப்ஸ்டீன் கூட்டாளி மேக்ஸ்வெல்
கிஸ்லைன் மேக்ஸ்வெல் என்பவர் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய குற்றவாளி. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்ததை இந்தக் காணொளியில் காணலாம்.
"மேக்ஸ்வெல், நீங்கள் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய நண்பரும் நம்பிக்கைக்குரியவருமா?" என்ற கேள்விக்கு,
"உங்கள் கேள்விக்கு பதில் சொல்ல விரும்புகிறேன். ஆனால் என் வழக்கறிஞரின் ஆலோசனையின்படி, இந்த கேள்விக்கும் அதனைச் சேர்ந்த கேள்விகளுக்கும் மரியாதையுடன் பதில் சொல்ல மறுக்கிறேன். என் ஹேபியஸ் மனு நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது."
"அதனால், அமெரிக்க அரசமைப்பின் ஐந்தாவது திருத்தத்தின் கீழ் எனது பதிலளிக்காமல் இருப்பதற்கான உரிமையை பயன்படுத்துகிறேன்." என மேக்ஸ்வெல் பதிலளித்தார்.
"உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுப்பதற்கான ஒரே காரணம், அந்த பதில் உங்களை குற்றவாளியாக காட்டும் என நீங்கள் நம்புவதாலா?" என்ற கேள்விக்கு,
"பதிலளிக்காமல் இருப்பதற்கான உரிமையை பயன்படுத்துகிறேன்" என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு