You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் - என்ன நடந்தது?
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தாலிபன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பிபிசி செய்தியாளர் யாமா பாரிஸ் களத்திலிருந்து பேசுகையில், “வான்வழி தாக்குதல் நடந்த இடம் இது தான். இந்த கட்டடம் போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தின் ஒரு பகுதியாகும். தீ இன்னும் எரிந்து கொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடியும், புகை மூட்டம் மேலே உயர்ந்துகொண்டிருக்கிறது. இரவு 8:50 மணி அளவில் காபூலில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்டது. அதன் பிறகு விமானங்களின் சத்தமும், பாதுகாப்பு படையினரின் வான்வழி பாதுகாப்பு தாக்குதல் நடத்திய சத்தமும் கேட்டது…”
“போதை பொருளுக்கு அடிமையான 3000-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை, ஆனால் அது நூற்றுக்கணக்கில் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களின் நிலை பற்றி அறிய குடும்பத்தினர் வெளியே அழுது கொண்டு காத்திருக்கின்றனர்.”
“இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல்வதையும், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது. சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த கூடுதல் விவரங்கள் இனிமேல்தான் தெரியவரும்.” என்றார்.
ஆனால், இந்த இடத்தில் தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. காபூல் மற்றும் கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில் உள்ள ராணுவத் தளங்கள் மற்றும் பயங்கரவாத ஆதரவு உள்கட்டமைப்புகளை மட்டுமே இலக்கு வைத்து தாக்கியதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு