You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பில் நீதிமன்றம் சொன்னது என்ன?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் தந்தையும் மகனும் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், இந்த சம்பவம் "கொலை" என தீர்மானிக்கப்படுவதாக மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதி முத்துக்குமாரன் தமது தீர்ப்பை வாசிக்கும் போது, தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் கொலை என தீர்மானிக்கப்படுவதாகக் கூறினார்.
உயிரிழந்த தந்தை ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கூறிய நீதிபதி, வழக்கினுடைய அனைத்து தரப்பு விசாரணைகளின் அடிப்படையில், "குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள்" எனத் தீர்ப்பளிப்பதாகக் கூறினார்.
"குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது" என்று நீதிபதி கூறினார்.
மார்ச் 30-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு