You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரான் கால்பந்து வீராங்கனைகள் நாட்டிற்கு திரும்பிச் செல்ல எதிர்ப்பு ஏன்?
இரானுக்கு திரும்பி சென்றால் ஆபத்து ஏற்படலாம் என கூறி இரான் பெண்கள் கால்பந்து அணியின் பேருந்தை ஆஸ்திரேலியாவில் போராட்டக்காரர்கள் தடுத்தனர்.
இரான் பெண்கள் அணி தங்கள் நாட்டுக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்தது. ஆனால் ஒரு போட்டிக்கு முன் தேசிய கீதத்தை பாட மறுத்ததால், அவர்களின் பாதுகாப்பு குறித்து ஆதரவாளர்கள் கவலை தெரிவித்தனர்.
தேசிய கீதத்தை பாட மறுத்த செயல் இரானில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. அணியில் உள்ள 5 வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலியாவில் மனிதாபிமான விசா வழங்கப்பட்டுள்ளது.
மற்ற வீராங்கனைகளும் விரும்பினால் ஆஸ்திரேலியாவில் தங்கலாம் என்று ஆஸ்திரேலிய குடியேற்ற அமைச்சர் டோனி பர்கி (Tony Burke) தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு