You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: தேர்தல் நடத்தை விதிகள் எந்த தேர்தலில் அறிமுகமானது தெரியுமா?
தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டதுமே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் இந்த விதிகளை வகுத்துள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் இந்த விதிகளை பின்பற்றுவது அவசியமாகும்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறினால், தேர்தல் ஆணையம் வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவியல் வழக்குப் பதிவு செய்து சிறை தண்டனை கூட வழங்க முடியும். இந்த விதிகள் அமலில் இருக்கும் போது அரசு எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாது. அனுமதி பெறாமல் கட்சி கொடிகள், பேனர்களை வீடுகளுக்கு முன் வைக்கக் கூடாது.
1960ம் ஆண்டு கேரள சட்டப்பேரவை தேர்தலின் போது முதன் முதலாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக தொடங்கின. 1967ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதும் இந்த விதிகள் அமல்படுத்தப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிகள் எந்தவொரு சட்டத்தின் கீழும் அமலாகவில்லை. எனினும் இதன் சில விதிகள் ஐ பி சி -ன் கீழ் அமலாகின்றன.
(2023-ல் வெளியிடப்பட்ட இந்த காணொளி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மறுபகிர்வு செய்யப்படுகிறது)
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு