You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரான், வெனிசுவேலா போன்ற நட்பு நாடுகளை சீனா ஏன் காப்பாற்றவில்லை?
மத்திய கிழக்கில் நடக்கும் போரின் அதிர்ச்சியை சீனா இதுவரை உணரவில்லை. ஆனால் அதன் அதிர்வலைகளை உணர்ந்து வருகிறது.
குறுகிய கால அடிப்படையில் பார்த்தால், பல மாதங்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு அதனிடம் உள்ளது, அதன் பிறகு உதவிக்காக அண்டை நாடான ரஷ்யாவை சீனா நாடலாம்.
ஆனால் நீண்ட கால நோக்கில், மத்திய கிழக்கில் அதன் முதலீடுகளுக்கு மட்டுமல்ல, அதன் லட்சியங்களுக்கும் இந்த போர் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை சீனா கணக்கிடும்.
ஏற்கனவே அமெரிக்காவுடனான வர்த்தக போரில் ஓராண்டை கழித்திருக்கும் சீனா, தற்போது தனது முக்கிய கப்பல் போக்குவரத்து பாதைகள் மற்றும் அதன் எரிசக்தி தேவைகள் பலவற்றை வழங்கும் மத்திய கிழக்கில் கொந்தளிப்பான சூழலை எதிர்கொள்கிறது.
போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக ஹோர்மூஸ் நீரிணை வழியாக செல்லும் போக்குவரத்து தொடர்ந்து முடக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு