காணொளி: 'என் மகளை மிகவும் நேசிக்கிறேன்' - ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய்
காணொளி: 'என் மகளை மிகவும் நேசிக்கிறேன்' - ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய்
மலாவியை சேர்ந்த மார்த்தா ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தன் குழந்தை ரேச்சலை கவனித்துவருகிறார்.
தன் மகளின் நடத்தை மற்றும் சமூகத்தில் ஆட்டிசம் குறித்து நிலவும் தவறான புரிதல் ஆகியவற்றுடன் போராடி வருவதால் மார்த்தாவின் மனநலனும் மோசமடைந்தது…
ஆப்ரிக்கா முழுவதும் சுமார் 1.5 கோடி பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் ஏழ்மையான நாடுகளுள் ஒன்றாக மலாவி இருப்பதால், ஆட்டிசம் பாதித்தவர்களுக்கான ஆதரவு மிகவும் குறைவாக உள்ளது.
ரேச்சல் தற்போது மலாவியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவும் சில மையங்களுள் ஒன்றான செயின்ட் ஜான் ஆஃப் காட் மையத்திற்கு செல்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு