காணொளி: இந்தியா உலகக்கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய பும்ரா
இந்த டி20 உலக கோப்பை தொடரில் மூன்று முறை சாம்பியனான அணி, டி20 உலக கோப்பையை தக்க வைத்த அணி மற்றும் உள்ளூரில் டி20 உலக கோப்பையை வென்ற முதல் அணி எனப் பல பெருமைகளை தன்வசம் ஆக்கியுள்ளது இந்திய அணி. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் பங்கு மிக முக்கியமானது.
சர்வதேச அரங்கில் அவருடைய மிகச் சிறந்த டி20 பந்துவீச்சு (4/15) ஒரு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வந்திருக்கிறது. இந்த உலகக் கோப்பையின் டாப் விக்கெட் டேக்கராக (14 விக்கெட்டுகள்) உருவெடுத்திருக்கிறார். அதுவும் 6.21 என்ற எகானமியோடு!
இந்த உலகக் கோப்பையில் ஒவ்வொரு பௌலரும் ஓவருக்கு 8-9 ரன்கள் கொடுக்கும்போது இவர் மட்டும் ஓவருக்கு 6.21 என்ற வீதத்தில் வீசுயிருக்கிறார் என்பது பிரம்மிக்க வைக்கிறது. அதுதான் அவரது தனித்துவம். இதுவே அவரது திறமையைப் பற்றிச் சொல்கிறது.
டெஸ்ட் போட்டிகளில் சிவப்புப் பந்தில் ஜொலிக்கிறார், ஒருநாள் போட்டிகளிலும் முத்திரை பதிக்கிறார், டி20 போட்டிகளிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறார்.
முழு விவரம் காணொளியில்....
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



