நியூ யார்க் நகரில் உறைபனி - தாக்கத்தை உணர்த்தும் புகைப்படங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ப்ரூக்ளினில் குவிந்திருக்கும் பனியில் குழந்தைகள் சறுக்கி விளையாடுகின்றனர்.
    • எழுதியவர், குவாசி ஜியாம்ஃபி அசிடூ
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணம் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவைச் சந்தித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சென்ட்ரல் பார்கில் குவிந்திருக்கும் பனியில் ஒருவர் சறுக்கி விளையாடுகிறார்.

நியூ யார்க் நகரின் சென்ட்ரல் பார்கில், 11 செமீ அளவு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, நியூ யார்க் நகரின் ப்ரூக்ளினில் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மாகாணத்தின் மற்ற இடங்களில் 19 செமீ வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை துறை தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Kena Betancur/Getty Images

படக்குறிப்பு, சாலைகளில் உறைந்து கிடக்கும் பனியில் ஆர்வத்துடன் சறுக்கி விளையாடச் செல்லும் குழந்தைகள்

பனிப்புயல் காரணமாக மாகாணத்தின் பாதிக்கும் மேற்பட்ட கவுன்டிகளில் நியூ யார்க் ஆளுநர் கேத்தி ஹோசுல் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பனியில் விளையாடிய மக்கள் பனி மனிதன் உருவத்தை உருவாக்கியுள்ளனர்.

சனிக்கிழமை, நியூ யார்க் பகுதியில் 900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Spencer Platt/Getty Images

படக்குறிப்பு, பாதையில் குவிந்திருக்கும் பனியை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானங்களை கண்காணிக்கும் இணையதளமான ஃப்ளைட் அவேரின்படி, நாடு முழுவதும் 8000-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.

பட மூலாதாரம், Spencer Platt/Getty Images

படக்குறிப்பு, சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை மூடியுள்ள பனிப்பொழிவு

சனிக்கிழமை அன்று நியூ யார்கின் மத்தியப் பகுதியான சிராக்யூஸிலிருந்து தென் கிழக்கு பகுதியான லாங் ஐலான்ட் வரை 15 செமீ முதல் 25 செமீ வரை பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

பட மூலாதாரம், Spencer Platt/Getty Images

படக்குறிப்பு, உறைந்திருக்கும் பனியில் சறுக்கி விளையாடும் குழந்தைகள்

அதிக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நியூ ஜெர்சியிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், TIMOTHY A. CLARY / AFP via Getty Images

படக்குறிப்பு, நியூ யார்கின் சென்ட்ரல் பார்க்கில் பனியால் சூழப்பட்ட குட்டையில் பறவைகள்

கனெக்டிகட்டில் உள்ள ஃபேர்ஃபீல்ட் கவுன்டியில் 22 செமீ பனிப்பொழிவு பதிவாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பனிப்போர்வை போர்த்தியிருக்கும் நியூ யார்கின் சென்ட்ரல் பார்க்

பனிப்புயல் தற்போது குறைந்திருந்தாலும் வெப்ப நிலை உறைய வைக்கும் நிலையிலும் சாலைகள் ஆபத்தான நிலையிலும் உள்ளன.

பட மூலாதாரம், TIMOTHY A. CLARY / AFP via Getty Images

படக்குறிப்பு, பனியால் சூழப்பட்ட சென்ட்ரல் பூங்காவில் செல்லப்பிராணியுடன் நடைபயிற்சி

வீடற்றவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருவதற்கான கோட் ப்ளூ நியூ யார்க் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பனி போர்த்திய சாலையில் நடந்து செல்லும் மக்கள்.

பட மூலாதாரம், Getty Images

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு