You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: லண்டன் 'வீராசாமி' உணவகம் மூடப்படுவதை தடுக்க கோரிக்கை
ரீஜென்ட் தெருவில் உள்ள வீராசாமி உணவகத்தின் ஆதரவாளர்கள், அந்த இடத்தின் உரிமையைக் கொண்டுள்ள க்ரவுன் எஸ்டேட்டிலிருந்து ஒரு கடிதம் வந்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வீராசாமி உணவகத்தின் குத்தகை புதுப்பிக்கப்படாது என்றும், தற்போதைய இடத்திலிருந்து அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டரி ஹவுஸ் (Victory House) கட்டிடத்தை நவீன தரத்திற்கேற்றவாறு மாற்றவும், முழுமையாக பயன்படுத்தும் வகையில் கொண்டு வரவும் விரிவான புதுப்பிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக க்ரவுன் எஸ்டேட் தெரிவித்துள்ளது.
மேலும்,” இதனால் MW Eat நிறுவனத்திற்கு ஏற்படும் ஏமாற்றத்தை புரிந்துகொள்கிறோம்; வெஸ்ட் எண்ட் பகுதியில் புதிய இடம் கிடைக்க உதவியும் நிதி இழப்பீடும் வழங்க முன்வந்துள்ளோம்" என்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு