You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: எப்ஸ்டீனுடன் சிறு வயது மம்தானி இருப்பது போன்ற படம் வைரல் - உண்மை என்ன?
எப்ஸ்டீன் மற்றும் மம்தானி தொடர்பான இந்த புகைப்படங்கள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி படங்கள்.
நியூயார்க் மேயர் மம்தானியும் அவர் தாயாரும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இருப்பதாக இந்த படங்கள் காட்டுகின்றன.
இந்த படங்கள் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு எப்படி?
இவை ஆன்லைனில் மீண்டும் பகிரப்பட்டு வருகின்றன.
சதி கோட்பாட்டாளர் அலெக்ஸ் ஜோன்ஸ் தனது ஒரு பதிவில், இந்த படங்கள் மம்தானிக்கு எப்ஸ்டீனுடன் தொடர்பு இருக்கலாம் என்பதை நிரூபிப்பதாக தவறாக கூறுகிறார்.
எப்ஸ்டீன் தொடர்பான பல ஆவணங்களை அமெரிக்க நீதி துறை வெளியிட்டதற்குப் பிறகு, இத்தகைய கூற்றுகள் ஆன்லைனில் பரவின.
அவற்றில், 2009 அக்டோபரில் பொழுதுபோக்கு பிரசார நிபுணர் பெக்கி சீகல் எப்ஸ்டீனுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலும் உள்ளது.
அந்த மின்னஞ்சலில், மம்தானியின் தாய் மீரா நாயர் இயக்கிய திரைப்படம் தொடர்பாக, பாலியல் கடத்தல் குற்றவாளி கிஸ்லேன் மேக்ஸ்வெல் வீட்டில் நடந்த ஒரு விருந்தில் தாம் கலந்துகொண்டதாக சீகல் கூறுகிறார்.
அந்த விருந்தில் மீரா நாயர், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் மற்றும் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கலந்துகொண்டதாக சீகல் கூறுகிறார்.
எக்ஸ் தளத்தில் உள்ள ஒரு பகடி கணக்கில் இந்த படங்களை வெளியிடப்பட்டன. அந்த பதிவர் இந்த உள்ளடக்கம் கேலிக்குரியது என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், பலர் மூலத்தை குறிப்பிடாமல் அவற்றை பகிர்ந்தனர்.
கூகுளின் SynthID-ஐ (சிந்த் ஐ.டி) பயன்படுத்தி பிபிசி இந்த படங்களை சரிபார்த்தபோது, அவை கூகுள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டவை என தெரியவந்தது.
மேலும், ஏஐ படங்களில் காணப்படும் வழக்கமான பிழைகளும் அதில் உள்ளன. சிதைந்த background (பேக்ரௌண்ட்), எப்ஸ்டீன் கிளிண்டனை இயல்பற்ற வகையில் பிடித்திருப்பது, மம்தானி தவறான வயதில் காட்டப்படுவது போன்றவை தெரிகின்றன.
2009ல் மம்தானிக்கு 18 வயது. மீரா நாயரின் முதல் திருமணம் மிட்ச் எப்ஸ்டீன் என்ற கலைஞருடன் நடந்தது; ஆனால், மம்தானி மீராவின் இரண்டாவது கணவரின் மகன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு