You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
‘கூட்டணியில் உள்ள கட்சிகளை அழிப்பதே பாஜக-வின் வழக்கம்’- தேஜஸ்வி யாதவ்
“பாஜக எந்த கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கிறதோ, அக்கட்சிகளை அழிப்பதே வழக்கமாக கொண்டுள்ளது” என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
“தமிழ்நாட்டில் அதிமுக ஆகட்டும், மகாராஷ்டிராவில் சிவசேனா ஆகட்டும், அகாலி தளம், மெகபூபா (முப்தி) உடைய கட்சி அல்லது (ஓம் பிரகாஷ்) சௌதாலாவின் கட்சி என எதுவாக இருந்தாலும் இதுதான் நிலை”
“நீங்கள் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என எங்கு சென்றாலும், பாஜக முழுமையாக ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவையே அமல்படுத்த விரும்புகிறது. தேர்தலுக்கு முன்பே அரசு இயந்திரங்கள், பண பலம் மற்றும் இயந்திர பலத்துடன் ஒட்டுமொத்த அமைப்பையும் சமரசம் செய்து, தேர்தல் ஆணையத்தை பாஜகவின் ஒரு பிரிவாக மாற்றிவிட்டார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அங்கமாக மாறி, ஜனநாயகத்தையே அழித்துவிட்டார்கள்.” என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு