You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரான் பள்ளி தாக்குதல் குறித்து அமெரிக்கா சொன்னது என்ன?
‘சனிக்கிழமை தெற்கு இரானில் உள்ள ஒரு பெண்கள் பள்ளி மீது நடந்ததாக கூறப்படும் தாக்குதல் குறித்து, அரசாங்கத்திடம் உள்ள தகவல்கள் மற்றும் தற்போது உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் குறித்து தெரிவிக்க முடியுமா?’ என அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் பீட் ஹெக்செத்-இடம் கேட்கப்பட்டபோது,
“எனக்குத் தெரிந்ததும், நான் சொல்லக்கூடியதும் ஒன்றுதான், அதை நாங்கள் விசாரித்து வருகிறோம். பொதுமக்கள் இருக்கும் இடங்களை நாங்கள் இலக்காக கொள்ளவில்லை. ஆனால் அந்த சம்பவத்தை நாங்கள் ஆய்வு செய்து விசாரித்து வருகிறோம்.” என்று கூறினார்.
“உங்களிடம் தகவல் சேகரிக்கும் திறன்கள் இருக்கின்றன. பல நாட்கள் ஆகிவிட்டது. அது யாருடைய வெடிகுண்டு என்பதைப் பற்றி ஏதேனும் தெளிவு இருக்கிறதா?” என்ற கேள்விக்கு,
“அதை நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு