You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பாலத்தீன கிராமங்கள் மீது தாக்குதல்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் உள்ள பாலத்தீன கிராமங்கள் மீது இஸ்ரேலிய குடியேறிகள் நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் அங்கு வாழும் மக்களிடையே கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளன.
பாலத்தீன குடியிருப்பாளர் சமர் ஒமர், குடியேறிகள் வீடுகளை எரித்ததாகவும், புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் தனது குழந்தைகளுடன் வீட்டின் கூரையில் தஞ்சம் புகுந்து உயிருக்கு அஞ்சி நின்றதாகவும் வேதனையுடன் தெரிவித்தார்.
பாலத்தீனர் ஓட்டி வந்த வாகனம் மோதி இஸ்ரேலியர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, இந்த வன்முறை வெடித்துள்ளது.
இந்தச் சம்பவங்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு