You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: அஜித் பவார் இறந்த விமான விபத்தை நேரில் கண்டவர் கூறியது என்ன?
மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66. விமான விபத்தின் இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான தகவல்களை வழங்கியுள்ளது.
புனே (கிராமப்புற) எஸ்பி சந்தீப் சிங், ''இன்று (புதன்கிழமை) காலை 8.40 மணிக்கு தரையிறங்குவதற்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானது, அதில் ஐந்து பேர் இருந்தனர்.'' என்றார்.
பிபிசி மராத்தி செய்தியின்படி, அஜித் பவாருடன் இறந்த மற்ற நபர்களின் பெயர்கள் சுமித் கபூர், ஷாம்பவி பதக், விதிப் ஜாதவ் மற்றும் பிங்கி மாலி.
'தரையிறங்கும் போது ஏதோ பிரச்னை தெரிந்தது, விமானம் விபத்துக்குள்ளாகலாம் என்று தோன்றியது' என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
விமான விபத்தை நேரில் பார்த்தவர் கூறியது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு