காணொளி: சீனாவில் ஓட்டுநரின்றி இயங்கும் டாக்சி சேவை செயலிழப்பு

காணொளி: சீனாவில் ஓட்டுநரின்றி இயங்கும் டாக்சி சேவை செயலிழப்பு

சீனாவில் ஓட்டுநர் இல்லாமல் இயஙகும் தானியங்கி டாக்சி சேவையான ரோபோ டாக்சியின் பல கார்கள் வுஹான் நகர சாலைகளின் நடுவே செயலிழந்து நின்றன.

கடந்த மார்ச் 31-ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்த காணொளியில் பைடு (Baidu) நிறுவனத்தை சேர்ந்த 'அப்பல்லோ கோ ரோபோ டாக்சி' கார்கள் அபாய விளக்குகளை எரியவிட்டு சாலையின் நடுவே நிற்பதை காண முடிகிறது.

டாக்சிக்குள் பயணித்தவர்கள் எந்த காயமும் இன்றி வாகனங்களில் இருந்து வெளியேறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பைடு நிறுவனம் எதுவும் விளக்கம் அளிக்கவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதன் காரணமாக ஓட்டுநரின்றி இயங்கும் டாக்சிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு