You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 'அமெரிக்காவுக்கு எண்ணெய் தேவையில்லை' - டிரம்ப் கூறுவது என்ன?
இன்று அமெரிக்காவில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டொனால்ட் டிரம்ப், "எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை. எங்களுக்கு தேவையான எண்ணெய் எங்களிடமே இருக்கிறது. அது எங்களிடம் இருக்கும் முக்கியமான வளங்களில் ஒன்று.
எண்ணெய் உற்பத்தியில் மற்ற நாடுகளை விட இரட்டிப்பாகவும், அதற்கு மேல் நாங்கள் இருக்கிறோம். மற்ற நாடுகளை விட நாங்கள் இரட்டிப்புக்கும் மேலாகவும் உற்பத்தி செய்கிறோம். அதனால் எங்களுக்கு அது தேவையில்லை, ஆனால் நாஙகள் அதை செய்தோம்.
அது பழக்கத்தால் செய்தது போலதான், அது நல்ல விஷயம் இல்லை. அங்கு நமக்கு நல்ல கூட்டாளிகள் இருப்பதால் அதை செய்தோம். அங்கு சில முக்கியமான மத்திய கிழக்கு நாடுகளும், இஸ்ரேலும் இருக்கின்றன. பல காரணங்களுக்காக நாங்கள் அதை செய்தோம்.
ஆனால் நாங்கள் இதை செய்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் ஒருபோதும் செலவு செய்த பணத்தை திரும்ப கேட்கவில்லை. அது எங்களுக்காக அல்ல, மற்ற நாடுகளுக்காகவே." எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு