You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியப் பெருங்கடலில் இரானிய போர்க்கப்பலை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள காணொளி
இந்தியப் பெருங்கடலில் இரானிய போர்க்கப்பலை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்காவின் பெண்டகன் வெளியிட்டுள்ள காணொளி இது.
இந்த கப்பலில் இருந்து 80 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் இதுவரை 32 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது.
இந்திய பெருங்கடலில் இரானிய கப்பல் அமெரிக்காவால் தாக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை நடந்தது என்ன?
புதன்கிழமை அன்று காலை இலங்கையின் தென் பகுதியில் இரான் கடற்படைக்கு சொந்தமான IRIS Dena எனும் கப்பல் நீரில் மூழ்கியது.
இலங்கையின் காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 நாட்டிகள் மைல் தொலைவில் இந்த கப்பல் இருந்ததாகவும் இந்த கப்பலில் இருந்து அபாய அழைப்பு வந்ததாகவும் இலங்கை தெரிவித்துள்ளது.
நீர்மூழ்கிக்கப்பல் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இது நீர்மூழ்கிக்கப்பல் தாக்குதல் இல்லை என இலங்கை கடற்படையின் செய்தித்தொடர்பாளர் பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் இந்திய பெருங்கடல் அருகே இரானிய கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பல் தாக்கி மூழ்கடித்தது என ஹெக்செத் அறிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசுகையில் டார்பிடோவைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.