காணொளி: ஈஸ்டர் நிகழ்வில் விசுவாசிகளை சாட்டையால் அடிக்கும் 'சாத்தான்கள்'

காணொளி: ஈஸ்டர் நிகழ்வில் விசுவாசிகளை சாட்டையால் அடிக்கும் 'சாத்தான்கள்'

எல் சால்வடாரில் நடக்கும் பல நூற்றாண்டுகள் பழமையான இந்தச் சடங்கில் சாத்தான் வேடமிட்ட நபர்கள் கத்தோலிக்க விசுவாசிகளை வேடிக்கையாக சாட்டையால் அடிக்கின்றனர். இது நன்மை, தீமை இடையிலான போராட்டத்தை உணர்த்தும் ஒரு சடங்காகும்.

டல்சிகுய்ன்ஸ் என அழைக்கப்படும் இவர்கள், ஈஸ்டரை ஒட்டி தங்கள் பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய விரும்புவோரை சாட்டையால் அடிக்கின்றனர்.

இயேசு போல வேடமணிந்த ஒருவர், சாத்தான்களின் உடல்கள் மீது நடந்து செல்வதுடன் இந்தச் சடங்கு நிறைவடைகிறது. இது தீமைக்கு எதிராக நன்மை பெறும் வெற்றியைக் குறித்து, புனித வாரத்தின் தொடக்கத்தை அடையாளப்படுத்துகிறது.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு