You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: டிரம்ப் முதல் கிளிண்டன் வரை - எப்ஸ்டீன் ஆவணங்கள் என்றால் என்ன?
டொனால்ட் டிரம்ப், ஈலோன் மஸ்க், பில் கேட்ஸ், பில் கிளின்டன், ஸ்டீவ் டிச், இந்த பெயர்கள் எப்ஸ்டீன் ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன.
எப்ஸ்டீன் ஆவணங்கள் தொடர்பான ஒரு மின்னஞ்சலில் இந்திய பிரதமர் மோதியின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் மீண்டும் இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.
இந்த எப்ஸ்டீன் ஆவணங்கள் என்பது என்ன? உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள்… என எல்லோருடைய பெயரும் இந்த விவகாரத்தில் தொடர்புப்படுத்தப்படுவது ஏன்?
அமெரிக்காவை சேர்ந்த ஒரு பணக்காரர்தான் ஜெஃப்ரி எப்ஸ்டீன். 2008ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பிறகு சிறுமியை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் 2019ல் கைதானார். வழக்கு விசாரணையின்போதே 2019 ஆகஸ்ட் மாதம் சிறையிக் உயிரிழந்தார். இவருடைய மரணம் தற்கொலை என தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த விசாரணையின்போது பல ஆவணங்கள் சேகரிக்கப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளிடம் நடத்தப்பட்ட உரையாடல் பதிவுகள், பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் என பல விஷயங்கள் கிடைத்தன. இந்த விசாரணையில் சேகரிக்கப்பட்டவைதான் எப்ஸ்டீன் ஆவணங்கள்.
கடந்தாண்டு நவம்பர் மாதம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளிப்படைத்தன்மை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி கடந்தாண்டு முடிவிலேயே முதல்கட்டமாக எப்ஸ்டீன் ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை (DOJ)வெளியிட்டது.
அப்படி அந்த ஆவனங்களில் என்ன இருக்கின்றது என்பது விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு