You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இந்தியப் பெருங்கடலில் இரான் போர்க்கப்பலை தாக்கிய அமெரிக்கா
இரானின் கடற்படை கப்பல் ஒன்று இலங்கையின் காலே துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் மூழ்கியது.
இரானிய கப்பல் மூழ்கியதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என, இலங்கை பாதுகாப்பு இணை அமைச்சர் அருணா ஜெயசேகரா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தற்போது நடைபெற்ற காப்பாக இருப்பதாக கருதப்பட்ட இரானிய போர்க்கப்பல் ஒன்றை இந்திய பெருங்கடலில் அமெரிக்கா மூழ்கடித்ததாக" தெரிவித்தார்.
"அக்கப்பல் நீர்மூழ்கிக் குண்டால் மூழ்கடிக்கப்பட்டது" என அவர் தெரிவித்தார்.
ஆனாலும், தாக்குதலுக்கு உள்ளான இரானிய கப்பலின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய இரான் கப்பலில் இருந்த 80 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டதாக, பாதுகாப்பு துறை செயலாளர் சம்பத் துய்யகொந்தா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட உடல்கள் காலே தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக களத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு