You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: போரால் வீடிழந்த பாலத்தீனர்களை மேலும் இன்னலில் தள்ளும் 'மணல் புயல்'
தெற்கு மற்றும் மத்திய காசாவில் இடம்பெயர்ந்த பாலத்தீனர்கள் முகாம்கள் அமைந்திருக்கும் பகுதியில் கடுமையான மணல் புயல் வீசியது.
இதனால் பல தற்காலிக கூடாரங்கள் சேதமடைந்து, அங்கிருந்த மக்களின் பொருட்கள் காற்றில் பறந்தன.
பல ஆயிரம் இடம்பெயர்ந்த பாலத்தீனர்கள் பலத்த காற்றின் மத்தியில் தங்கள் தற்காலிக வீடுகளை பாதுகாக்க போராடினர்.
இந்த புயல் கான் யூனிஸ் மற்றும் காசா நகரம் ஆகிய பகுதிகளை தாக்கியது.
மணல் புயல் காரணமாக மெத்தைகள், போர்வைகள் மற்றும் அடிப்படை தேவைகள் போன்ற முக்கிய பொருட்கள் மணலில் புதைந்து போயுள்ளதாகவும், தற்காலிகமாக அமைக்கப்பட்ட கழிப்பறைகளும் புயலில் சிதறிப் போயுள்ளதாகவும் மக்கள் கூறினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு